தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணியில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் முக்கூடல் அருகே வேளாளர்குளம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டிற்கு பொங்கல் விடுமுறைக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று முக்கூடலிலுள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குடும்பத்துடன் குளிக்க சென்றுள்ளனர். அப்போது மாப்பிள்ளை யூரணியைச் சேர்ந்த நாக அர்ஜுனன் மகள் வைஷ்ணவி (வயது 13) மற்றும் ஐயப்பன் மகள் மாரி அனுசியா (16) ஆகியோர் திடீரென மாயமாகி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆற்றில் அங்கும் இங்கும் தேடியுள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் தேடிய நிலையில் வைஷ்ணவியை (16) சடலமாக மீட்டுள்ளனர். மேலும் மற்றொரு சிறுமியான அனுஷ்யாவை தேடி வருகின்றனர். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தினர்.