பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குளத்தூர் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பாக காவலர் மற்றும் பொதுமக்கள் நல்லிணக்க விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் நட்புணர்வை மேம்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக காவலர் மற்றும் பொதுமக்கள் நல்லிணக்க விளையாட்டு போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப துவக்கி வைத்தார்.
இதில் கபடி, வாலிபால், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஒற்றுமை உணர்வுடனும், என்றென்றும் நட்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் உட்பட விளாத்திகுளம் உட்கோட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.