மதர் சமூக சேவை நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் கோனோகார்பஸ் மரத்திற்கு தடை விதித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடி பாராட்டி நன்றி தெரிவித்துளார்
சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் கோனோகார்பஸ் மரத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் 10/ 07 /2024 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட கிரீன் கமிட்டி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது :-
கோனோகார்பஸ் (Conocarpus) இந்த மரம் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டதாகும். இது மிகுந்த பெரிய ஆபத்தை ஏற்படுத்த கூடிய மரம் ஆகும். தற்போதைய காலகட்டத்தில் தமிழகத்தில் வெகுவாக வளர்க்கப்பட்டு வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட பூங்காக்கள், சாலை ஓரங்களில், நீர்நிலைகளில், தொழிற்சாலைகளில் இந்த மரங்கள் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரத்தில் குருவிகள் கூடு கட்டாது, இந்த மரத்தின் இலையை ஆடு மாடுகள் உண்ணாது, தேனீக்கள் கூட இந்த மரத்தை அண்டாது, அதிக வெப்பத்தை தாங்க கூடிய மரம் என்ற அடிப்படையில், அரபு நாடுகளில் வளர்க்கப்பட்டு வந்த இந்த மரங்கள் இப்போது அங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கூட பல மாநிலங்களில் இம்மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மரத்தின் மூலமாக ஒவ்வாமை , ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் மேலும் இந்த மரத்தின் பூவிலிருந்து உதிர்ந்து காற்றில் வரக்கூடிய சிறிய வெள்ளை நிற இதழை சுவாசித்தால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளது என்று வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானது. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சக்கூடியது என்றும் இந்த மரம் அறியப்படுகிறது. ஏன் இப்படிப்பட்ட மரங்களை நாம் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து நாம் ஏன் இப்படிப்பட்ட பிரச்சனைகளை விலைக்கு வாங்க வேண்டும். ஒரு காலத்தில் இப்படித்தான் கருவேல மரங்களை நாடு முழுவதும் பரப்பினோம். ஆனால் இன்று கருவேல மரங்களை அழிக்க முடியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம். நம்முடைய பாரம்பரியமான நமது நாட்டு மரமான வேப்ப மரத்தை விட, பூவரச மரத்தை விட, அரச மரத்தை விட சிறந்த மரம் இல்லை. இந்த மரங்கள் எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது. இந்த மரங்கள் சுற்றுச்சூழலுக்கும். மனித ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
அவற்றை எல்லாம் விட்டு, விட்டு அழகிறுக்காக, ஆடம்பரத்திற்காக நாம் ஏன் இது போன்ற கொடிய செயலை செய்ய வேண்டும். நமது தொழில் நகரமான தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளிலிலும், தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் சாலை ஓரங்களிலிலும் , சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மாநகரங்களிலும், அதிக அளவில் வழக்கப்பட்டு வருகிறது.
இந்த உலகம் நம் முன்னோர்களால் அழகாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று நாம் அதை சீரழித்துக் கொண்டிருக்கிறோம். நம் எதிர்கால தலைமுறையினருக்கு அறிவார்ந்த சமுதாயத்தை, ஆரோக்கியமான சமுதாயத்தை, அழகான சமுதாயத்தை, விட்டுச் செல்ல வேண்டும்.
எனவே, அதற்காக சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கோனாகார்பஸ் (Conocarpus) மரத்திற்கு தமிழகத்தில் தடை விதித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார் இ ஆ.ப அவர்களுக்கும் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ்.ஜே கென்னடி நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார் .