கடலுார் முதுநகரில் நுாலகம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு நேற்று சென்றார். அப்போது, வழியில் திடீரென முதுநகர் காவல் நிலையத்தில் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விவரம், நிலைய எழுத்தர் அறை, பதிவேடுகள், ஆண் மற்றும் பெண் கைதி அறை, காவல் நிலைய அடிப்படை வசதிகள், சி.சி.டி.வி., பதிவுகள் குறித்து ஆய்வு செய்தால். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் தாரேஷ் அகம்மது, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ராஜாராம் உட்பட பலர் உடனிருந்தனர்.