தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஹெச் எம் எஸ் உழைப்பாளர் சங்கம்நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டாக்டர் ராஜ லட்சுமி தலைமை தாங்கினார் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய தொழிலாளர் கல்வி வளர்ச்சி வாரியம் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெச் எம் எஸ் உழைப்பாளர் சங்கம் கிளை அலுவலகம் திறக்கப்படாத ஊர்களில் கிளை அலுவலகம் திறக்க வேண்டும்
வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டஹெச் எம் எஸ் உழைப்பாளர் சங்கம் சார்பில் டிசம்பர் மாதம் கிரிக்கெட் போட்டி நடத்துவது என்றும் தமிழ்நாடு ஹச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தது ஒட்டி கொண்டாடப்படும் வகையில் இரண்டாவது மாவட்ட மாநாடு 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டது கூட்டத்தில் 10 தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன
இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ராதா மாவட்ட பொருளாளர் பெஸ்சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல் மாவட்ட இணை செயலாளர் ஜாகிர் உசேன் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் மரிய திவ்யா. சந்திரமணி. விஜி நிமல். காமாட்சி சரோஜா கோவில்பட்டி தொகுதி செயலாளர் மணிகண்டன் ஓட்டப்பிடாரம் ராஜேஷ் விளாத்திகுளம் வேல் புஷ்பம் திருச்செந்தூர் பெமீனா சிஐஎஃப் எக்ஸ் செயலாளர் முத்துராஜ் ரயில் நிலைய ஆட்டோ சங்கத்துணைச் செயலாளர் மில்டன் உள்ளிட்டஏராளமான உறுப்பினகலந்து கலந்து கொண்டனர்.