தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும், புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், கடந்த ஜீலை மாதம் 28-ஆம் தேதி முதல் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் 4 மண்டலங்களிலும் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. இந்த மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளையும் சேர்ந்த மக்கள் பயனடைகின்றனர். குறிப்பாக பிறப்பு சான்றிதழ், முகவரி மாற்றம் போன்றவை உடனடியாக மாற்றம் செய்து வழங்கப்படுகிறது. இதுவரை 4000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 70 சதவீதம் மனுக்களுக்கு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்களுக்கும் பிறகு தீர்வு காணப்படும். நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு திமுக அரசு பொறுப்பேற்ற பின் அனைத்து பகுதிகளிலும் வருகின்றனர். 80 சதவீதம் வரை முழுமையாக பணிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக ஆலயம், கல்வி நிலையங்கள் பகுதிகள் முழுமையாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 அடி 3 அடி உள்ள சந்துகளுக்கு வரைமுறைப்படுத்தி சாலைகள் அமைக்கப்படும். அதில் சில பணிகள் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் வருகிறது. பேவர்பிளாக் சாலை, தார்சாலை என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு முறைப்படுத்தி வருகிறோம்.
விவிடி சாலையின் இரண்டு பகுதிகளிலும் பேவர்பிளாக் சாலை அமைத்ததால் மாசு குறைந்துள்ளது. தற்போது மாநகராட்சியை பொறுத்தவரை 206 பூங்கா இருக்கும் நிலை இருந்திருக்க வேண்டும். ஆனால் பல இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு தேர்வு. அந்த 40 சதவீத ஆக்கிரமிப்பு இடங்களும் விரைவில் மீட்கப்பட்டு அந்த இடத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கபடி, கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்து அவருடைய ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்போம். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள பக்கிள் ஓடை சீரமைக்கப்பட்டு 11 வழித்தடங்கள் மூலம் மழைநீர் கடலுக்கு செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சில பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் போது குடிநீர் இணைப்பு தூண்டப்படுவதாக புகார்கள் வருகின்றன. அவ்வாறு தூண்டப்படும் இடங்கள் உடனடியாக இணைப்புகளை வழங்கி பொதுமக்கள் பாதிக்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.