தமிழக மக்கள் மோடியை புறக்கனித்து ராகுலுக்கு வாக்களித்தனர்- அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசினார்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-10-10 09:56:57
தமிழக மக்கள் மோடியை புறக்கனித்து ராகுலுக்கு வாக்களித்தனர்-  அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசினார்

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மத்திய தெற்கு பகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் செந்திலாண்டவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பகுதி செயலாளர் நட்டார்முத்து தலைமையில், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் பிரபாகர், ஜெபேரவை இணைச்செயலாளர் மனுவேல்ராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் பாபிபூரணராஜா, மகளிர் அணி துணைச்செயலாளர் சண்முகதாய், பகுதி இணைச்செயலாளர் ஜெயபாரதி, துணைச்செயலாளர் சிவன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி விஜயன், வட்ட பிரதிநிதி விஜயன், செயலாளர்கள் பிரபாகரன். உலகநாதபெருமாள், டைமண்ட் ராஜ், ரவீந்திரன், பூர்ணசந்திரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சுதாகர் வரவேற்புரையாற்றினார். 

தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் பேசுகையில், எல்லேலாருக்கும் உறுப்பினர் அட்டை முறையாக சேரவேண்டும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை எடப்பாடியார் நான்கரை ஆண்டுகாலம் நல்லாட்சி செய்தார். இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுக தேர்தலில் சிறிய சரக்குகள் நமக்கு ஏற்பட்டது. காரணம் கூட்டணி பலம் இல்லாதது தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடியா ராகுலா என்று வந்தபோது மோடியை அனைவரும் புறக்கணித்து ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று 40 தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெற்றனர். வரும் சட்டமன்ற தோத்தலில் எடப்பாடியார் தலைமையில் 2016ல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் ஜெயலலிதா இருக்கும் போது போட்டியிட்டதை போல் யார் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும் அதே போல் தேர்தலை மக்களோடு கூட்டணி வைத்து சந்திப்போம். வீடுதோறும் அதிமுக ஆட்சியில் சாதனைகளை கொண்டு போய் சொக்க வேண்டும் என்று பேசினார். அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜேந்திரன் , அமைப்பு செயலாளர் சின்னத்துரை, அமைப்பு சாரா ஓட்டுநா் அணி துணைச்செயலாளர் பெருமாள்சாமி, பகுதி செயலாளர் முருகன், தலைமை பேச்சாளர் முருகானந்தம், ஆகியோர் பேசினர். 

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பிரபாகர், விக்னேஷ், லட்சுமணன், ஜான்சன் தேவராஜ், ஜோசுவா அன்புபாலன், ராஜேஸ்வரி, பெருமாள், சரவணப்பெருமாள், பகுதி செயலாளர் சேவியர், துணைச்செயலாளர் செண்பக செல்வன், மற்றும் பல்ேவறு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வட்டசெயலாளர் மனோகர் நன்றி கூறினார்.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE