தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஆசிரியர் பாலகிருஷ்ணனுக்கு உடன்குடி பிசகுவிளையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு உடன்குடி பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர் மும்தாஜ் பேகம் தலைமையேற்று நடத்தினார். முன்னாள் கவுன்சிலர் சலிம் ஒருங்கிணைப்பு செய்தார்.
இந்த நிகழ்வில், ஆம்ஆத்மி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க தலைவர் முகைதீன், வணிகர் முன்னேற்ற சங்க தலைவர் அம்புரோஸ், பிசகுவிளை ஊர் தலைவர் சுயம்பு ராஜ், விசிக இலக்கிய அணி தர்மராஜ், பிரியா கேஸ் கனகராஜ் மற்றும் 4வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் பசிர், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் பிரதீப் கண்ணன் , திமுக ஹாஜா, கந்தபழம், வழக்கறிஞர் செல்வகுமார் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.