காலாவதியான கடலை மாவு பாக்கெட் விற்ற கடைக்காரருக்கு 10 ஆயிரம் அபராதம்- தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு தூத்துக்குடி
By admin on | 2024-09-01 00:00:00
காலாவதியான கடலை மாவு பாக்கெட் விற்ற கடைக்காரருக்கு 10 ஆயிரம் அபராதம்- தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் மன்னன்விளையைச் சார்ந்த ஜெயராமன் என்பவர் கோயம்புத்தூரிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வாங்கியுள்ளார். அதைப் பயன்படுத்துவதற்காக கடலை மாவு பாக்கெட் எடுத்த போது அது காலாவதியானது எனத் தெரிந்துள்ளது. காலாவதியான தேதியிலிருந்து 2 நாட்கள் கடந்து கடைக்காரரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உடனே கடைக்காரரிடம் கொண்டு சென்று மாற்றுப் பொருள் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் மாற்றுப் பொருள் தர மறுத்ததுடன் மனுதாரரை உதாசினப்படுத்தியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயராமன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் கடலை மாவு பாக்கெட் விலையான ரூபாய் 65, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூபாய் 5,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 10,065 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 % வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.

Comments




Last Updated by admin on2025-01-29 03:59:52

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE