நாசரேத் அருகே கணவன் மனைவி தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பிரவீன்குமார். இவரது மனைவி ஷெர்லின் கோல்டா (35)
இருவரும் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளான். தற்போது ஷெர்லின் கோல்டா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதன் காரணமாக கல்லூரிக்கு செல்லாமல் விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி சென்று வீடு திரும்பிய பிறகு, கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பிரவீன் குமார் பாத்ரூம் சென்றுள்ளார்.
அவர் பாத்ரூம் சென்று விட்டு வந்து பார்த்தபோது ஷெர்லின் கோல்டா பெட்ரூம்குள் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, ஷெர்லின் கோல்டாவின் தாயார் ஜான்சிராணி நாசரேத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிவு செய்து, ஷெர்லின் கோல்டா தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது கொலையா.? என விசாரணை செய்து வருகின்றனர்.
நாசரேத்தில் பேராசிரியை குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.