2026ல் நீங்கள் எதிர்பாக்கும் நல்ல கூட்டணி அமையும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சியும் அமையும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழக வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம் நடத்துவதற்கான மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும்
எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி பானு பிருந்தாவன் திருமண மண்டபம் மினி ஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், எடப்பாடியார் நான்கரை ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தினார்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது வேறு ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தற்போது எடப்பாடியார் பூத் வாரியாக 9 பேர் கொண்ட நிர்வாகத்தை நியமித்துள்ளார்.
இது மிகவும் அருமையான திட்டம், அதிமுக எத்தனையோ சோதனைகளை சந்தித்துள்ளது ஒருமுறை அதிமுக ஆட்சியை இழந்தால் அடுத்த முறை மிகப்பெரிய வெற்றி பெறும், ஆனால் திமுக ஒரு முறை ஆட்சியில் இருந்தால் அடுத்த முறை மிகபெரிய தோல்வியை தான் சந்திக்கும் 2026ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும்.
நல்ல கூட்டணியும் அமையும் வருகின்ற ஆட்சி அதிமுக ஆட்சி தான் என்றார்.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட கழக அவைத்தலைவர் திருப்பாற்கடல், திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில இணை செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், துணை செயலாளர் இரா. ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், ஒன்றிய கழக செயலாளர்கள் காசிராஜன், அழகேசன் செம்பூர் ராஜ் நாராயணன், பூந்தோட்டம் மனோகரன், அச்சம்பாடு சௌந்தரபாண்டி, உடன்குடி பொறுப்பாளர் உரக்கடை குணசேகரன், நகரச் செயலாளர்கள் திருச்செந்தூர் மகேந்திரன், காயல் மௌலானா, பகுதிச் செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, பொறுப்பாளர்கள் செண்பகச் செல்வன், சுடலைமணி, மாநில மீனவர் அணி துணைத்தலைவர் மணப்பாடு ஈராமியாஸ், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜா இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜெ.பிரபாகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சுதர்சன் ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் டார்சன், முன்னாள் எம்பி நட்டர்ஜி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, அண்ணா தொழிற்சங்க மண்டல போக்குவரத்து கழக செயலாளர் பிரிவு செயலாளர் கல்வி குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மாநகராட்சி மாநகராட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணை சேர்மன் விஜயன், பேரூராட்சி கழக செயலாளர்கள் காசிராஜன், வேதமாணிக்கம், ரவிச்சந்திரன், செந்தில் ராஜ்குமார், ஆறுமுக நயினார், துரைசாமி ராஜா, கோபாலகிருஷ்ணன், குமரகுருபரன், அசோக்குமார், கிங்ஸ்லி, முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், பெருமாள்ஆண்ட்ருமணி, பிள்ளைகள். இளங்கோ, சரவணன், ராஜ்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லட்சுமணன், முத்துக்கனி, பள்ளக்குறிச்சி கார்த்தீசன், நவ்ஷாத், துணைச் செயலாளர்கள் ஐடியல் பரமசிவம், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், பொன்ராஜ், அமிர்தராஜ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, மனுவேல்ராஜ், அமி, மகேந்திரன், அ.தி.மு.க. எஸ் கே மாரியப்பன், பூக்கடை வேலு, துணைத் தலைவர் ரத்ன சபாபதி, புதுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பால மேணன், தலைமைக் கழகப் பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ராஜகுமார், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் இந்திரா, இணைச் செயலாளர்கள் மெஜூலா, சாந்தி , ஞான புஷ்பம், துணைச் செயலாளர்கள் சண்முகத்தாய், ராஜேஸ்வரன் , ராதா ஆனந்த், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் அலெக்ஸ் ஜி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கேடிசி ஆறுமுகம், லட்சுமணன், ஜவகர், பொன்னம்பலம், சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் இம்ரான், மாவட்ட வர்த்தக அணி தலைவர் திருத்துவ சிங், பொருளாளர் சுகுமார், நிர்வாகிகள் கே.கே.பி. விஜயன், பண்டாரவிளை பால்துரை, காந்தி ராமசாமி, குலசை சுடலை, பிள்ளைவிளை பால் துரை,அமுதுனா குடி சின்னத்துரை, சேவியர் ராஜ், கொம்பையா, உலகநாத பெருமாள், மகளிர் முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, ஷாலினி, சாந்தி, சரோஜா, அன்ன பாக்கியம், அன்னத்தாய் ரம்யா நாராயணன், மற்றும் பாலாஜெயம், சாம்ராஜ், பரிபூரண ராஜா, சுந்தரேஸ்வரன், சொக்கலிங்கம், சகாய் ராஜா உள்ளிட்ட பலர் இருந்தனர்.